அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பதவி நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் மேலும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டிஆர்பி ராஜாதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளதால் அவருக்கு தொழில்நுட்பத்துறை இலாகா அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பால்வளத்துறை அல்லது சுற்றுலாத்துறை இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றப்பட வாய்ப்பு
இதனையடுத்து, சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரனின் இலாகா மாற்றப்படும் என்று தெரிகிறது. அதே போல், அமைச்சர் பெரியசாமிக்கு வருவாய்த்துறை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுவதையடுத்து, அப்படி மாற்றம் செய்யப்பட்டால் அவரிடம் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு வழங்க வாய்ப்புள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமரசம் ஆகிவிட்டால் அவரது இலாகாவில் மாற்றம் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சிக்கியதால் அவர் மீது அதிருப்தி ஏற்படும் பட்சத்தில் அவர் பெயர் இந்த இலாகா மாற்றத்தில் அடிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.