பறக்கும் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வைரல் வீடியோ
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம், விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களும் விஞ்ஞானிகளும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடு வானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தின் ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இஸ்ரோ மெட்டீரியல்ஸ் இயக்குநர்(ஓய்வு பெற்றவர்) மற்றும் ராக்கெட் உற்பத்தி நிபுணர் டாக்டர் பி வி வெங்கிடகிருஷ்ணன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.