வளைகுடா பதற்றம்: இந்திய மாலுமிகளை பாதுகாக்க 'Seafarer-First' திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Seafarer-First' என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு எண்ணெய் டாங்கர் கப்பல்கள் (MT Al Bahiyah மற்றும் MT Mombasa) மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், ரோஹன் குமார் என்ற இந்திய மாலுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பல இந்திய மாலுமிகள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வளைகுடா பகுதியில் எந்த நாட்டு போர்க்கப்பல் அல்லது வணிகக் கப்பல்களில் இந்தியர்கள் பணியாற்றினாலும், அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
கப்பல்களை கண்காணிக்க 'ரியல்-டைம் டாஷ்போர்டு'
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGS) முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பெர்சியன் வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் பயணிக்கும் ஒவ்வொரு கப்பலையும் கண்காணிக்க 'ரியல்-டைம் டாஷ்போர்டு' உருவாக்கப்படும்.
இதன் மூலம் கப்பலின் தற்போதைய இருப்பிடம், அதன் உரிமையாளர், பணியாளர்களின் எண்ணிக்கை, மாலுமிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
தொடர்பு அதிகாரி
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 'பிரத்யேக தொடர்பு அதிகாரி'
பாதிக்கப்பட்ட அல்லது வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள ஒவ்வொரு இந்திய மாலுமியின் குடும்பத்திற்கும் ஒரு பிரத்யேக தொடர்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
இந்த அதிகாரி மாலுமிகளின் மருத்துவ நிலவரம், பயண ஆவணங்கள், தாயகம் திரும்புதல் (Repatriation), மாலுமிகள் நல நிதி உதவி, நிலுவைச் சம்பளம் மற்றும் காப்பீட்டுத் தொகை போன்ற அனைத்து விபரங்களையும் ஒருங்கிணைக்கும் ஒற்றைப் புள்ளியாகச் செயல்படுவார்.
ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்திய கடற்படை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்காப்பற்ற வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) இந்தியா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
ஒருங்கிணைப்பு
சர்வதேச தூதரகங்களுடன் ஒருங்கிணைப்பு
ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்திய கடற்படை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்காப்பற்ற வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) இந்தியா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், எந்தவொரு இந்திய மாலுமியும் அவர்களின் விருப்பமின்றி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் வளைகுடா கடல் பகுதிக்குள் பயணிக்கக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மாலுமிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காக 24x7 ஹெல்ப்லைன் மற்றும் வாட்ஸ்ஆப் எண்களும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.