Loading...
மத்திய அரசு அறிவித்த தரமற்ற மருந்துகளில் 45% தமிழகம், உபி, கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
ஆகஸ்ட் மாதத்தில் தரமற்ற மருந்துகளில் சுமார் 45% மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டவை

மத்திய அரசு அறிவித்த தரமற்ற மருந்துகளில் 45% தமிழகம், உபி, கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2026
10:53 am

செய்தி முன்னோட்டம்

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகளில் சுமார் 45% தமிழகம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளின் தரத்தை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் தொடர் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவில், முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் உட்பட மொத்தம் 220 மருந்துகள் 'தரமற்றவை' என அறிவிக்கப்பட்டு, அவற்றின் விவரங்கள் பொதுமக்கள் விழிப்புணர்விற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மருந்து தரம்

3 மாநிலங்களில் 100 மருந்துகள் கண்டறியப்பட்டது

கண்டறியப்பட்ட 220 தரமற்ற மருந்துகளில் 100 மருந்துகள் (45%) தமிழகம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆகும்.

இரு மாநிலங்களிலும் தலா 38 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில் 24 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், மாநில அளவில் மாதிரிகளை சேகரித்து தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டதன் காரணத்தினாலேயே இத்தகைய தரமற்ற மருந்துகளை உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டுவர முடிந்தது என்றும், தீவிர ஆய்வுகளின் போது அதிக எண்ணிக்கையிலான தரமற்ற மருந்துகள் கண்டறியப்படுவது இயல்பானது என்றும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT