
நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள்
செய்தி முன்னோட்டம்
மொபைல் ஃபோன் திருடன் ஒருவன், நடுரோட்டில் வைத்து ஷம்பு தயாள் என்ற டெல்லி காவலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது.
கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட போதிலும் ஷம்பு தயாள் திருடனைத் தப்பி ஓட விடவில்லை. அதனால், திருடன் அனிஷை, சம்பவத்தின் போதே விரைந்து வந்த பிற காவலர்கள் கைது செய்தனர்.
இது நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு, கடந்த 8ஆம் தேதி, 57 வயதான கான்ஸ்டபிள் ஷம்பு தயாள் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த டெல்லி காவலரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், சம்பவத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி
CCTV shows Delhi Cop Stabbed Repeatedly, Crowd Watched, Did Nothing https://t.co/NwPPUd8a2g pic.twitter.com/ltSuaGqhWt
— NDTV (@ndtv) January 11, 2023