NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 
    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 
    இந்தியா

    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 

    எழுதியவர் Nivetha P
    April 27, 2023 | 12:19 pm 0 நிமிட வாசிப்பு
    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 
    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு

    ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தினை சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார் என்று செய்திகள் வெளியானது. சமீபத்தில் இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அரசு வேலை வேண்டும் என்றும் கோரியிருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரை ஏமாற்றிய வினோத் பாபுவின் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வைரலானது. இதனை கண்ட உண்மையான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உளவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் இவர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் இவர் போலி விளையாட்டு வீரர் என்றும், இவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    வினோத் பாபு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு 

    இதனை தொடர்ந்து அவர் கடையில் வாங்கிய வெற்றி கோப்பைகளை கொண்டு, தான் ஆசியக்கோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையினை வென்றதாக கூறி அமைச்சர்கள் உள்பட பலரை ஏமாற்றி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் போலியான நபர் என்பதனை உளவுத்துறை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து உண்மையான வீல் சேர் கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது வினோத் பாபு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று(ஏப்ரல்.,27) 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராமநாதபுரம்
    இந்தியா
    கிரிக்கெட்

    ராமநாதபுரம்

    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல் தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 9,355 கொரோனா பாதிப்பு: 26 பேர் உயிரிழப்பு  கொரோனா
    மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு! ஏர் இந்தியா
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  சூடான்
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்!  ரிசர்வ் வங்கி

    கிரிக்கெட்

    ஒரே மைதானத்தில் டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் : விராட் கோலி சாதனை டி20 கிரிக்கெட்
    ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை இலங்கை கிரிக்கெட் அணி
    CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள் ஐபிஎல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023