
அதிமுக தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு ஜூலை.,11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், எம்.எல்.ஏ.மனோஜ் குமார் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன் காரணமாக, 4 பேரும் கூட்டாக சேர்ந்த இந்த வழக்கினை இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் மேற்முறையீடு செய்தனர்.
அதன்படி இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அதிமுக தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
#BREAKING | அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகள் தள்ளுபடி!#SunNews | #ADMK | #MadrasHC pic.twitter.com/stz349ytej
— Sun News (@sunnewstamil) August 25, 2023