இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்!
தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. பயோமெட்ரிக் முறை என்பது விரல் ரேகை மூலம் பதிவு செய்வதாகும். இதன் மூலம் நெல் வியாபாரிகள் உள்ளே நுழையாமல் தடுக்கலாம், மேலும் விவசாயிகள் மட்டும் முழு பயனை பெறவர். நெல்லினை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட முடியும். பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதித்த பின் ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண்ணிற்கு ஓடிபி கிடைக்கும். இதில் விவசாயிகள் தங்கள் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளலாம்.