LOADING...
நக்சலிசத்திலிருந்து விடுதலை; 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வாக்களிக்கும் பீகார் கிராமம்
25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வாக்களிக்கும் பீகார் கிராமம்

நக்சலிசத்திலிருந்து விடுதலை; 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வாக்களிக்கும் பீகார் கிராமம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2025
06:30 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குத் தயாராகி வரும் ஜமூய் மாவட்டத்தின் சோர்மாரா கிராமத்தில், வாக்களிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல. இது 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறைக்குப் பிறகு அமைதி திரும்பியதற்கான ஒரு புதிய தொடக்கம். பல தசாப்தங்களாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கிராமம், கொலைகள் மற்றும் பயங்கரவாதச் சூழலில் இருந்து விடுபட்டு, தற்போது மத்தியப் படைகளின் பாதுகாப்புடன் ஜனநாயக செயல்பாடான வாக்குப்பதிவில் பங்கேற்கிறது. கடந்த நவம்பரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் நக்ஸலிசத்தை முழுமையாக ஒழிப்பதே இலக்கு என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

22 கிமீ தொலைவு

முன்பு 22 கிமீ தொலைவில் வாக்குச் சாவடி 

சோர்மாரா கிராம மக்கள் முன்னர் வாக்களிக்க சுமார் 22 கிமீ தொலைவில் உள்ள பர்ஹாட் நிர்வாகப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது சோர்மாரா ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 220 அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளால் குண்டு வீசப்பட்ட அதே பள்ளியில்தான் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) கிராம மக்கள் அச்சமின்றி வாக்களிக்க உள்ளனர். இந்த மாற்றத்தின் முக்கிய அடையாளமாக, ஒரு காலத்தில் பயங்கரவாத ஆட்சியைக் கவனித்து வந்த மாவோயிஸ்ட் தளபதி பாலேஸ்வர் கோடாவின் மகனான சஞ்சய் கோடா, இன்று வாக்குச் சாவடியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல், சோர்மாரா கிராமத்திற்கு மீண்டும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.