Page Loader
இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது
கைது செய்யப்பட்ட 6 பேரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.

இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது

எழுதியவர் Sindhuja SM
Jun 06, 2023
03:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த ஒரு மிகப்பெரும் கடத்தல் நெட்வொர்க்கை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இந்த நெட்வொர்க் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி 'டார்க் வெப்' மூலம் இந்தியா முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில், இன்ஸ்டாகிராம் மூலம் இந்த போதைப்பொருள் நெட்வொர்க்கின் கூட்டாளி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு நமக்கு போதைப்பொருள் வேண்டுமா என்று கேட்பார். நாம் விருப்பம் தெரிவித்தால், உரையாடல் தனிப்பட்ட மெசேஜ் செயலியான 'Wicker Me'க்கு மாறும். அதன்பிறகு, கிரிப்டோகரன்சி மூலம் பணம் வசூலிக்கப்பட்டு, நெதர்லாந்து அல்லது போலந்தில் இருந்து LSD இறக்குமதி செய்யப்படும்.

details

இந்த கும்பலின் தலைவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்

இன்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் முறியடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க், இப்படித்தான் இந்தியா முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தது. NCB அதிகாரிகள் 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு பிறகு பிடிபடும் மிகப்பெரும் போதைப்பொருள் கும்பல் இதுவாகும். லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு(LSD) என்பது ஒரு செயற்கை இரசாயன அடிப்படையிலான-மருந்தாகும். இது ஒரு ஹாலுசினோஜென் என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் சில மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் தலைவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 'டார்க் வெப்' எனப்படும் இணையதளத்தில் விளம்பரம் செய்வது மட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் போதைப்பொருள் சப்ளே செய்திருக்கின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.