
பெங்களூரூ பொறியியல் கல்லூரியில் சீனியர் மாணவியை பலாத்காரம் செய்த ஜூனியர் மாணவன் கைது
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் கழிப்பறையில் சீனியர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஜீவன் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அக்டோபர் 10 ஆம் தேதி நடந்தது, ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த மாணவி புகாரளித்துள்ளார். அதே கல்லூரியில் ஏழாம் செமஸ்டர் மாணவியின் புகாரின் அடிப்படையில், ஜீவன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (கற்பழிப்புக்கான தண்டனை) இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல்
FIR என்ன சொல்கிறது
முதல் தகவல் அறிக்கையில், கவுடாவும், பாதிக்கப்பட்ட மாணவியும், அம்மாணவர் கல்வியில் பின்தங்கியிருக்கும் வரை (பெயில் ஆகும் வரை) ஒரே வகுப்பில் படித்ததாக என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி, சில பொருட்களை வாங்குவதற்காக அந்த மாணவி அவனை சந்தித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது, ஏழாவது மாடியில் சந்திக்க வருமாறு அவன் பலமுறை அவளை அழைத்துள்ளான். அவள் வந்ததும், அவளை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதாகவும், ஆறாவது மாடி வரை அவளை பின்தொடர்ந்து சென்று, பின்னர் அவளை கழிப்பறைக்குள் இழுத்து சென்று, அங்கு அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து, கவுடா அவளை அழைத்து, "மாத்திரை வேண்டுமா" என்றும் கேட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்வுகள்
பாதிக்கப்பட்ட மாணவி, நண்பர்கள், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்
பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது இரண்டு நண்பர்களிடம் இது குறித்து கூறிவிட்டு, பின்னர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அம்மாணவி மிகவும் வருத்தமாகவும் பயமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த 5 நாட்களுக்கு பின்னர் அவர்கள் அவளை ஹனுமந்தநகர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அழைத்துச் சென்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை குற்றம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும், இது ஆதாரங்களை சேகரிப்பதில் சவாலாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அதிகாரிகள் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.