தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என கேள்வியெழுப்பினர்.
அதனை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும்,
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதனையும் எழுத்துப்பூர்வ முறையில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மத்திய அரசின் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற 'டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்' தற்போது 9 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு கடந்த மாதம் 19ம் தேதியன்று தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறினார்.
4 பேர் கொண்ட குழு
விசாரணை குழு அமைத்த மத்திய கல்வித்துறை அமைச்சர்
இதனை தொடர்ந்து அவர், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் இதில் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததோடு, பல்கலைக்கழக வளாகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட விசாரணை குழுவினை அமைத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.