NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    05:44 pm
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

    அரியலூர் மருத்துவ கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இதில் 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் படி தற்போது இந்த கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு அம்மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு போராட்டத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்போவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அறிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

    2/2

    மத்திய அரசின் நீட் தேர்வு அறிவிப்பால் பறிபோன மாணவியின் உயிர்

    அரியலூர் மாவட்ட குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிட குடும்பத்தில் பிறந்த கூலித்தொழிலாளியின் மகள் தான் அனிதா. டாக்டர் ஆகவேண்டும் என்னும் கனவில் தமிழ்வழி வாயிலாக கல்விப்பெற்று 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1176மதிப்பெண்களை அனிதா பெற்றிருந்தார். ஆனால் மத்தியஅரசு 12ம்வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக எடுத்துகொள்ளாமல் நீட்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என கூறியதையடுத்து மனமுடைந்து போனார். ஏழை குடும்பத்தில் பிறந்த அவரால் விலையுயர்ந்த நீட்தேர்வு பயிற்சிகளை மேற்கொள்ளமுடியாது என்பதால், தன்னைப்போல கிராமங்களில் இருக்கும் ஏழை மாணவர்களால் நீட் தேர்வினை எதிர்கொள்ளமுடியாது என்றுகூறி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் நீதிமன்றம் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடக்கும் என்றுகூறி உத்தரவிட்டதால் அனிதா 2017 செப்டம்பரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    நீட் தேர்வு
    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு மாவட்ட செய்திகள்
    வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18 வானிலை அறிக்கை
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் போக்குவரத்து காவல்துறை

    நீட் தேர்வு

    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா

    மு.க ஸ்டாலின்

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் பிரதமர் மோடி
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா? ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023