Page Loader
நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!
பிடிபட்டது அரிக்கொம்பன் யானை

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!

எழுதியவர் Arul Jothe
Jun 05, 2023
09:22 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் ஊருக்குள் நுழைந்து அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் அளிக்காத நிலையில் சுயம்பு, உதயன், அரிசி ராஜா என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும் தமிழக வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டி வந்த அரிக்கொம்பன் உத்தமபாளையம் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. இதற்காக 4 டாக்டர்கள் 2 குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். நீண்ட போராட்டதிற்கு பிறகு 4 மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்தனர். பின், வரவழைக்கப்பட்ட 3 கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். இந்த யானை 5600 கிலோ எடை கொண்டது.

ட்விட்டர் அஞ்சல்

3 கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பம் பிடிபட்டது