NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
    இந்தியா

    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023, 12:04 pm 0 நிமிட வாசிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

    ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டவர் சிவகுமார். இவர் ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த இவர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனை செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று(மார்ச்.,22) சென்னையில் இருந்த நிலையில் சோதனை குறித்த தகவலறிந்து ஈரோடு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொன்டு லஞ்ச ஒழிப்புத்துறை குழு இரவு 8 மணிவரை அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் நிலம் எடுப்பு தாசில்தாரராக பணிபுரிந்து வரும் சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்று புகார்கள் வந்துள்ளது.

    ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்

    இதனையடுத்து லஞ்சஒழிப்பு அதிகாரிகள் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீடு,நிறுவனம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள அவரது மகனின் வீடு என அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளார்கள். இதில் 30லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இவரையடுத்து வேலூர் மாவட்ட ஊரகவளர்ச்சிமுகமை திட்ட இயக்குனராக இருப்பவர் ஆர்த்தி(40), இவரது கணவர் ஆனந்தமூர்த்தி(46) தருமபுரியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு அரசுக்கு தெரியாமல் 1கோடிக்கு சொத்துக்கள் வாங்கிய புகாரில் பணியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆனந்தமூர்த்தி,ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் தந்தையான முன்னாள் வங்கிமேலாளர் கலைமணி(70) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவர் வசிக்கும் வீடுகளிலும் நேற்று ஒரேநேரத்தில் அதிகாரிகள் சோதனைமேற்கொண்டுள்ளார்கள். இதில் ரொக்கப்பணம், நகைகள்,சொத்துகள் குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    ஈரோடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்

    ஈரோடு

    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  காவல்துறை
    மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்  வணிகம்
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது தமிழ்நாடு
    மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023