அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார். இந்த கூட்டமானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணியளவில் நடக்கவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்து செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதிமுக கட்சிக்கு எடப்பாடி கே பழனிச்சாமி பொது செயலாளராக பொறுப்பேற்றாலும், இது சம்பந்தப்பட்ட வழக்குகள் இன்னமும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.