LOADING...
அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு: ஜூலை 12-ல் பொள்ளாச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடு
அண்ணாமலை, தனது இயக்கத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளா

அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு: ஜூலை 12-ல் பொள்ளாச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2026
04:11 pm

செய்தி முன்னோட்டம்

பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வரும் அண்ணாமலை, தனது இயக்கத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டியில் வருகிற ஜூலை 12ஆம் தேதி இந்த மாநாடு மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. உடுமலைப்பேட்டையில் இன்று நடைபெற்ற தனியார் விழாவில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்,"வருகிற ஜூலை 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சியில் நம்முடைய 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. உங்களின் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அன்றைய தினம் நம் இயக்கத்தின் அனைத்து சொந்தங்களையும் நேரில் சந்தித்துப் பேச ஆவலுடன் உள்ளேன்" என்றுதெரிவித்தார்.

மாநாடு

போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு

தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த முதல் மாநாட்டிற்கு 'போதை இல்லா பொள்ளாச்சி விழிப்புணர்வு மாநாடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறவுள்ள பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி திடலில், இன்று காலை அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட பந்தகால் நடப்பட்டுப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கமாகத் தொடங்கப்பட்டுத் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் 'வி தி லீடர்ஸ்' அமைப்பு, மிக விரைவில் முழுநேர அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பொள்ளாச்சியில் கூடவுள்ள இந்த முதல் மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement