LOADING...
பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றார் நிதின் நபின்!
அண்ணாமலை ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றார் நிதின் நபின்

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றார் நிதின் நபின்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 05, 2026
11:10 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். டெல்லி தலைவர்களின் பல்வேறு கட்ட சமாதான முயற்சிகளையும் மீறி அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பாஜக தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். கட்சியின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான பெரும் விவாதத்தை தற்பொழுது கிளப்பியுள்ளது.

பாஜக சமாதான முயற்சி தோல்வி

அண்ணாமலையை கட்சியில் நீடிக்க வைக்க பாஜக தேசியத் தலைமை நடத்திய தீவிர சமாதான முயற்சிகள் தோல்வி

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான கே.அண்ணாமலை, தற்பொழுது கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைப்பதற்காக, பாஜகவிற்குள் பல்வேறு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் கட்சியை விட்டு வெளியேறுவதைத் தடுத்து, அவரை சமாதானப்படுத்தி பாஜாகவிலேயே நீடிக்க வைக்க முடியும் என்று கட்சியின் மூத்த தேசியத் தலைமை கடைசி வரை மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது எனக் கூறப்படுகிறது. எனினும், கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் அண்மைக்கால செயல்பாடுகளில் தனக்கிருந்த அதிருப்தி காரணமாக அண்ணாமலை தனது விலகல் முடிவிலிருந்து பின்வாங்க மறுத்துவிட்டார்.

ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல்

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை முறைப்படி ஏற்றுக் கொண்டதாக அறிவிப்பு

பல நாட்களாக நீடித்து வந்த அரசியல் சலசலப்புகளுக்கு இடையே, அண்ணாமலையின் விலகல் கடிதத்தை பாஜக தலைவர் நிதின் நபின் தற்பொழுது முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து அண்ணாமலை தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்த சூழலில், இந்த அதிகாரப்பூர்வ ஏற்பு விபரம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழக பாஜகவின் தலைவராக அசுர வேகத்தில் செயல்பட்டு வந்த அண்ணாமலையின் பாஜக அத்தியாயம் தற்பொழுது முழுமையாக முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே அண்ணாமலை இன்று (ஜூன் 5) 12 மணிக்கு பொதுமக்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்த்த உள்ள உரையாடல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement