
ரூ.2,000 நோட்டுக்கள்: 93% திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை
செய்தி முன்னோட்டம்
வரும் செப்டம்பர்.,30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பினை ரிசர்வ் வங்கி கடந்த மே.,மாதம் அறிவித்தது.
இதனால் ரூ.2,000 நோட்டுக்களை வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
அதேபோல் ரிசர்வ் வங்கியின் அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் 19 பிராந்திய அலுவலகங்களில் இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரூ.2,000 நோட்டிற்கான மதிப்பிழப்புக்கு இன்னும் ஒருமாத கால அவகாசம் இருக்கும் நிலையில், தற்போதும் பலர் இந்நோட்டினை வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போதுவரை 93% டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆகஸ்ட் 31ம்தேதி வரை ரூ.23.32 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுக்கள் திரும்பபெறப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ரிசர்வ் வங்கி அறிக்கை
#JUSTIN || நாட்டில் புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன - ரிசர்வ் வங்கி#rupees2000 #reservebank pic.twitter.com/uihgPKyLKy
— Thanthi TV (@ThanthiTV) September 1, 2023