100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) துணைவேந்தராக நைமா கட்டூன் நியமிக்கப்பட்டுள்ளார். 100 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த உயர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார். பல்கலைக்கழகத்தின் பார்வையாளரான ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, கல்வி அமைச்சகத்தால் (MoE) நைமா கட்டூன் நியமனம் செய்யப்படுகிறார் என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதாலும், தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) நடைமுறையில் இருப்பதாலும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் (இசிஐ) இதற்கான அனுமதி கோரப்பட்டது.
முதல் பெண் துணை வேந்தர் நைமா
AMUஇல் உளவியலில் முனைவர் பட்டத்தை முடித்த கத்தூன், 1988இல் அதே பிரிவில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2006இல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2014இல் மகளிர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு முன்பு வரை அவர் பல்கலைக்கழத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1875இல் நிறுவப்பட்ட முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி, 1920 இல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆனது. செப்டம்பர் 2020 இல், AMU, ஒரு பல்கலைக்கழகமாக 100 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறியது. இந்த பல்கலைக்கழகத்திற்கு இதுவரை பெண் துணைவேந்தர் இல்லை. 1920 இல், பேகம் சுல்தான் ஜஹான் AMU அதிபராக (chancellor) நியமிக்கப்பட்டார். இன்றுவரை இப்பதவியை வகித்த ஒரே பெண்மணியாக அவர் மட்டும் தான்.
முதல் பெண் துணைவேந்தர்
Aligarh Muslim University #amu #Aligarh@AMUofficialPRO @AMUNetwork @AmuCommittee @rashtrapatibhvn pic.twitter.com/p1w7k1SLap— Ahmad Raza Sherwani (@AhmadRazaSherw2) April 23, 2024