LOADING...
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணை வளையத்தில் ஃபரிதாபாத்தின் Al-Falah பல்கலைக்கழகம்
விசாரணை வளையத்தில் ஃபரிதாபாத்தின் Al-Falah பல்கலைக்கழகம்

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணை வளையத்தில் ஃபரிதாபாத்தின் Al-Falah பல்கலைக்கழகம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2025
04:47 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாத வலைப்பின்னலில், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் (Al-Falah University) பணிபுரிந்த மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் தற்போது காவல்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளது. குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள டாக்டர் உமர் உன் நபி, அவரது கூட்டாளிகளான டாக்டர் முஸம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் ஷாஹித் ஆகியோர் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்கள்.

பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகம் தளமாக செயல்படுதல்

தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஃபரிதாபாத்தின் தௌஜ் கிராமத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம், "வெள்ளை காலர்" பயங்கரவாத வலைப்பின்னலின் முக்கியத் தளமாக செயல்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த வழக்கில் கைதான முக்கிய நபர்கள்: டாக்டர் உமர் உன் நபி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பை தானே நிகழ்த்திய முக்கியக் குற்றவாளி. டாக்டர் முஸம்மில் ஷகீல்: இவர் கைது செய்யப்பட்டதையடுத்தே (2,900 கிலோ வெடிபொருட்கள் இவரிடம் இருந்து மீட்கப்பட்டது), உமர் நபி அவசரமாகத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது. டாக்டர் ஷாஹீன் ஷாஹித்: இவர் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் இந்தியப் பெண்களுக்கான பிரிவை அமைக்கும் பொறுப்பில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இவருடைய காரில் இருந்தும் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகம்

பல்கலைக்கழகத்தின் மீதான சந்தேகம்

பயங்கரவாதத் தொடர்புடைய மருத்துவர்கள் உட்பட சுமார் 6 ஊழியர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆள்சேர்ப்பு (Recruitment) மற்றும் பின்னணிச் சரிபார்ப்பு (Background Verification)கொள்கைகள் கேள்விக்கு உள்ளாகியுள்ளன. டாக்டர் உமர் நபி இதற்கு முன் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து அலட்சியம் காரணமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனம் அரபு நாடுகளில் இருந்தும் நன்கொடைகளைப் பெறுவதாக ஒரு தகவல் உள்ளதால், அதன் நிதி ஆதாரங்களும் விசாரிக்கப்படுகின்றன. டெல்லிக்கு மிக அருகில் உள்ளதாலேயே இந்த இடத்தைத் தீவிரவாதக் குழு தங்கள் தளமாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

பின்னணி

பல்கலைக்கழகத்தின் பின்னணி மற்றும் விளக்கம்

1997ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், விசாரணையின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், அல்-ஃபலாஹ் பொறியியல் கல்லூரி, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடமிருந்து(NAAC) 'A' பிரிவு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு வருடம் கழித்து, ஹரியானா அரசு ஹரியானா தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் அதற்கு பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கியது. ஒரு வருடம் கழித்து 2015இல் இது UGC அங்கீகாரத்தைப் பெற்றது. அல்-ஃபலாஹ் மருத்துவக் கல்லூரியும் டெல்லியின் ஓக்லாவில் பதிவுசெய்யப்பட்ட அல்-ஃபலாஹ் அறக்கட்டளையால் இயக்கப்படும் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜவாத் அகமது சித்திக் 2014 முதல் அறக்கட்டளையின் தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.