
ஐப்பசி மாத பெளர்ணமி - திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
செய்தி முன்னோட்டம்
சிவபெருமானின் அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
இங்கு ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் இங்குவந்து 14 கிமீ.,தொலைவுள்ள மலைப்பாதையில் கிரிவலம் சென்று வழிபாடு செய்வர்.
'நினைத்தாலே முக்தி கிடைக்கும்' என்றும் இங்குள்ள சிவ ஸ்தலம் கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்று(அக்.,28)ஐப்பசி.,மாத பௌர்ணமி, பௌர்ணமிகளிலேயே மிகப்பிரசித்தி பெற்ற பௌர்ணமியாக இதனை பக்தர்கள் கருதி வழிபடுவர்.
இதன் காரணமாக இன்று திருவண்ணாமலையில் வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றும்,
பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இன்று கூடுதல் சிறப்பாக அனைத்து சிவபெருமான் கோயில்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
#WATCH | திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து, பௌர்ணமி தின சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள்!#SunNews | #Tiruvannamalai pic.twitter.com/OkmqGK4CUE
— Sun News (@sunnewstamil) October 28, 2023