Page Loader
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம்
இது பொய்யான புகார் என்று கூறிய முன்னாள் அமைச்சர்கள், இந்த வழக்குப் பதிவில் திமுகவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டினர்.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம்

எழுதியவர் Sindhuja SM
Mar 14, 2023
10:02 am

செய்தி முன்னோட்டம்

மதுரை விமான நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று(மார் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பொய்யான புகார் என்று கூறிய முன்னாள் அமைச்சர்கள், இந்த வழக்குப் பதிவில் திமுகவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டினர். "அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மதுரை, சிவகங்கை மாவட்ட சுற்றுப்பயணம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை பொறுக்க முடியாமல் திமுகவினர் இன்று பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று ராஜு கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிமுக

அதிமுக பிரச்சாரத்தை முடக்க திமுக அரசு முயன்று வருகிறது

"அதிமுகவை இப்படியே அழித்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது. இதுவரை யாரும் செய்யாத செயலை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் மீது பொய் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். "கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி வகித்தார். ஸ்டாலின் மீது பொய் வழக்கு போடப்பட்டதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கிடையில், ஆர்.பி.உதயகுமார், "இபிஎஸ்-ஸின் பிரச்சாரத்தை முடக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கிறது" என்றார். ஞாயிற்றுக்கிழமை, இபிஎஸ், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, சிவகங்கை எம்எல்ஏ பி.ஆர்.செந்திலநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவரைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.