
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக'வின் பொது செயலாளராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நடக்கும் செயலாளர்கள் கூட்டம் இதுவாகும்.
இந்நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழகத்தில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிமுக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பினை தற்போது ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும்
#BREAKING ஏப்.7ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்#ADMK #EdappadiPalanisamy #AIADMK #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/vVi5hFq6j1
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 1, 2023