இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
செய்தி முன்னோட்டம்
அதிமுக கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி தலைமையில், வரும் ஜூலை 5ம்தேதி காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டமானது நடைபெறவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,"இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தலைமைக்கழக செயலாளர்களும், மாவட்டக்கழக செயலாளர்களும் தவறாமல் நிச்சயம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அழைப்பு
#JUSTIN | அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2023
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 5ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு#AIADMK | #EPS | #ThanthiTV pic.twitter.com/IthJTBRaVK