
சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்த நடிகை அபிராமியின் வீடியோ-சின்மயின் பதில் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பேராசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கல்லூரி இன்று(ஏப்ரல்.,5)முதல் செயல்பட துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான பிக்பாஸ் புகழ் அபிராமி தான் படித்த கல்லூரிக்கு ஆதரவாக பேசிய வீடியோப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
அதில், என்ன நடந்தது என்பது குறித்துக்கூற ஆசிரியருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
இதற்கு பலரும் எதிர்ப்புத்தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மைத்தான், பொய்யாகிவிடாது என்று பதிவு செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்த நடிகை அபிராமியின் வீடியோ
என்ன லாஜிக் இது.. இத்தன வருஷம் நடக்கலைன்னா இப்ப நடந்திருக்காதா.. அதென்னங்க மேடம்… ‘யார் யாரோ’ ‘ காலாக்ஷேத்ரா னு வாயில வராதவங்களாம்’ பேசறாங்கலாம்.. ஏன் வாயில வந்தா தான் பேசனுமா…??? So இவாளுக்கு நடந்த தப்பு பெருசு இல்ல.. so called ‘ யார் யாரோ’ பேசறது தான் பிரச்சனையாம்.. pic.twitter.com/9Kvb3PnEnx
— MooknayakDr (@sathisshzdoc) April 4, 2023