NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசியல் கட்சியை ஆரம்பிக்க நடிகர் விஜய் முடிவு: எப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசியல் கட்சியை ஆரம்பிக்க நடிகர் விஜய் முடிவு: எப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார்? 

    அரசியல் கட்சியை ஆரம்பிக்க நடிகர் விஜய் முடிவு: எப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார்? 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 26, 2024
    09:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய உள்ளார். இதற்கு அவரது ரசிகர் மன்ற பொதுக்குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, விஜய் மக்கள் இயக்கம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    முக்கியமான மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று நடந்த கூட்டத்தில் இது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு அரசியல் கட்சியின் பெயரை நடிகர் விஜய்யின் பெயரில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அரசியல் கட்சியை பதிவு செய்யும் பணியும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்.

    தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜய், பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    கஜேட்மன்வ் 

    நடிகர் விஜய்யின் அரசியல் அறிமுகம் 

    2018-ல் தூத்துக்குடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை நடிகர் சந்தித்தார். அது அவரது அரசியல் அறிமுகத்தின் தீவிரத்தை உணர்த்தியது.

    அப்போதிலிருந்து, தளபதி விஜய்யின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம், அரசியல் நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    மேலும், அவரது விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த டிசம்பரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் நடிகர் விஜய் வழங்கினார்.

    முன்னதாக, 2026 ஆம் ஆண்டு அரசியலில் அறிமுகமாக இருப்பதாக நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் சீக்கிரமே கட்சியை தொடங்குமாறு தொடங்குமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    நடிகர் விஜய்

    'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது விஜய்
    லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் லியோ
    #தளபதி69: 12 வருடங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் உடன் இணையும் விஜய்? விஜய்
    சாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ லியோ

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025