
பழனி தேவஸ்தானத்தில் உள்ள 281 பணியிடங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிப்பு
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல்லில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தட்டச்சர், நூலகர், அலுவலக உதவியாளர் போன்ற 281 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதற்கான வயது வரம்பு 18 முதல் 45 என்றும் கூறப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயில் தேவஸ்தானத்தில் பணியிடங்களை நிரப்பவுள்ளதால், அரசு வேலையினை பெறவேண்டும் என எண்ணும் பட்டதாரிகள் தொடர்ந்து அதிகளவில் விண்ணப்பித்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி இதுவரை 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.
மேலும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், தினமும் தபால் மற்றும் கொரியர் மூலம் விண்ணப்பங்கள் மூட்டை மூட்டையாக வந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பழனி தேவஸ்தானத்தில் உள்ள 281 பணியிடங்கள்-15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
பழநி தேவஸ்தானத்தில் 281 பணியிடங்களுக்கு இதுவரை 15,000 விண்ணப்பங்கள் - மூட்டை மூட்டையாக டெலிவரி!#palanimurugantemple | #DevasthanamJob | #graduates | https://t.co/5W0wdBqEtM
— Tamil The Hindu (@TamilTheHindu) March 21, 2023