கோவா இரவு விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்களின் பாஸ்போர்ட் சஸ்பெண்ட்; அதன் அர்த்தம்?
செய்தி முன்னோட்டம்
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த விடுதியின் உரிமையாளர்களான சௌரப் மற்றும் கௌரவ் லூத்ரா ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளை கோவா காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. தீ விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே லூத்ரா சகோதரர்கள் அதிகாலை விமானம் மூலம் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றனர். அவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவியுடன் ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் இந்த பாஸ்போர்ட் சஸ்பெண்ட் உத்தரவு வெளியாகியுள்ளது.
முக்கியத்துவம்
பாஸ்போர்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் முக்கியத்துவம்
தனி நபரின் பாஸ்போர்ட்களை முடக்குவதால் என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பாஸ்போர்ட் சஸ்பெண்ட் செய்யப்படுவதால், அவர்கள் தாய்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. இந்த நடவடிக்கை இந்திய அரசுக்கு ராஜதந்திர வழிகளில் அவர்கள் இருவரையும் தாய்லாந்தில் இருந்து நாடுகடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர, இன்டர்போல் (Interpol) உதவியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும்.
ஜாமீன்
இடைக்கால ஜாமீன் மனு ரத்து
இதற்கிடையே, லூத்ரா சகோதரர்கள் கைது நடவடிக்கைகளில் இருந்து இடைக்காலப் பாதுகாப்பு கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வணிக ரீதியான சந்திப்பிற்காகவே' அவர்கள் தாய்லாந்து சென்றதாகவும், அவர்கள் தப்பி ஓடவில்லை என்றும், மேலும் அவர்கள் விடுதியின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக உரிமம் பெற்றவர்கள் (licensees) மட்டுமே என்றும் வாதிட்டார். இதற்கிடையில், இந்த விபத்து தொடர்பாக பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியின் ஐந்து மேலாளர்கள் மற்றும் ஊழியர்களை கோவா காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. மற்றும் விடுதியின் மற்றொரு 'sleeping partner' நேற்று டெல்லியில் கைது செய்துள்ளனர்.