Page Loader
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்

எழுதியவர் Srinath r
Oct 30, 2023
03:34 pm

செய்தி முன்னோட்டம்

செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், இறந்து கிடந்த ஒரு நபரின் உடல் 5 மணி நேரத்திற்கு மேலாக அகற்றப்படாத அவலம் அரங்கேரி உள்ளது. ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், அடையாளம் தெரியாத நபர் படுத்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தும் 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படவில்லை. எல்லை பிரச்சினை காரணமாக யார் சடலத்தை மீட்பது என்ற குழப்பம் நிலவுவதே, தாமதத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு மையம் அருகில், ஒருவர் இறந்து கிடப்பது கூட தெரியாமல் பொதுமக்கள் டிக்கெட் பெறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அவலம்