10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்
தமிழ்நாடு மாநிலத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்தேதி துவங்கி 20ம்தேதி வரை நடந்தது. தமிழகத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 203 சிறைவாசிகளில் 9 பெண்கள் உள்பட 200 கைதிகள் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள். மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள சிறைவாசிகள் தேர்வினை எதிர்கொண்டதில் 98.52%பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதன்படி புழல் சிறையில் உள்ள சுரேஷ் என்பவர் 422 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் வேலூர் சிறையில் உள்ள ராதா 414 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாளையங்கோட்டை சிறையிலுள்ள பாலசுப்ரமணியம் 413 மதிப்பெண்கள் பெற்று 3ம்இடத்தினை பிடித்துள்ளார். விடுதலைக்கு பின்னர் சிறைவாசிகள் வாழ்வாதாரப்பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்விகள் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.