
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கு 90வது பிறந்தநாள் கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது தாயாரான தயாளு அம்மாள் இன்று(ஜூலை.,9)தனது 90வது பிறந்தநாளினை கொண்டாடிவருகிறார்.
இந்த விழாவில் கலந்துக்கொண்டு தனது தாயாரின் ஆசிகளை பெறுவதோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்திருந்தார்.
அதே போல், மு.க.அழகிரியும் தனது குடும்பத்தோடு இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இருவரும் வெகுநாட்களுக்கு பின்னர் நேரடியாக சந்தித்துக்கொண்ட நிலையில், ஒன்றாக அமர்ந்து உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தயாளு அம்மாளின் மகனான மு.க.தமிழரசன், பேரன் அருள்நிதி, எம்.பி.கனிமொழி, தயாநிதி மாறன், இன்று பிறந்தநாள் கொண்டாடும் முரசொலி செல்வம் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, அவரது ஆசியினையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தயாளு அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டம்
#JUSTIN தயாளு அம்மாளின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் நடைபெறும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க அழகிரி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு#MKStalin #MKAlagiri #Kanmiazhi #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/xpLu70LwTc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 9, 2023