இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர்
நேற்று(மே-17) 1,021 ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, சற்று குறைந்து 906 ஆக பதிவாகியுள்ளது. எனினும், மொத்த தொற்றுகளின் எண்ணிக்கையை 4.9 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது என்று இன்று, வியாழக்கிழமை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,000 க்கும் மேலே உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 20 புதிய இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 5,31,814 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
குறைந்து வரும் இறப்பு சதவிகிதம்
இருப்பினும், தற்போது கோவிட் பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை, 10,200 க்கும் குறைவாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் மீட்பு விகிதம், தற்போது 98.79% ஆக உள்ளது. தற்போது வரை 4.4 கோடி பேர் கோவிட் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அதே நேரம், கொரோனவால் ஏற்படும், இறப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது. மறுபுறம், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம், இதுவரை குடிமக்களுக்கு 220.6 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. சமீபத்திய நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு, ஆர்க்டரஸ் எனப்படும் புதிய மாறுபாட்டின் தோற்றம் காரணமாக கூறப்படுகிறது, இது XBB.1.16 என்றும் அழைக்கப்படுகிறது.