
OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல்
செய்தி முன்னோட்டம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இது வரை ஆறு 'ஓ.பன்னீர்செல்வம்' வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பாஜக கூட்டணியில், சுயேச்சை வேட்பாளராக, ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கவுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, அதே ராமநாதபுரம் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக இதுவரை 'ஓ.பன்னீர்செல்வம்' என பெயரில் 6 பேர், சுயேச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளனர்.
வரும், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.
இதில், OPS தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு (ஓபிஎஸ் அணி), பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க தானே களமிறங்க உள்ளதாக OPS தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
6 OPS? யாருக்கு உங்கள் வோட்டு?
#WATCH | ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்
— Sun News (@sunnewstamil) March 27, 2024
ராமநாதபுரம் தொகுதியில் தற்போது வரை பன்னீர்செல்வம் என்ற பெயர் உடைய 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.#SunNews | #Ramanathapuram | #OPS | #LokSabhaElection2024 pic.twitter.com/MIrAbOZCY2