500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தமாக 5329 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
பள்ளி, கல்லூரிகள், கோயில்களின் அருகே உள்ள மதுபானக்கடைகள் பெரும்பாலும் மூடப்படும் என அரசு முடிவு செய்திருந்தது.
அதனடிப்படையில் 500 கடைகளை மூடுவதற்கான இறுதி பணிகள் கடைசிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Tasmac
மதுபான கடைகள் மூடல்
மேலும் "டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைக்க இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகவிருந்தது.
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஒரு நாள் துக்க அனுசரிப்பு காரணமாக அனைத்து அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.