LOADING...
மும்பை: தர்பூசணி சாப்பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்
உணவு நஞ்சானதால் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்தது

மும்பை: தர்பூசணி சாப்பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 27, 2026
07:07 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையின் பைதோனி பகுதியில், உணவு நஞ்சானதால் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்ததாக திங்களன்று காவல்துறை தெரிவித்தது. உயிரிழந்தவர்கள் அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நசீம் (35), மற்றும் அவர்களது இரண்டு மகள்களான ஆயிஷா (16), ஜைனப் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏப்ரல் 25ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில், அவர்கள் தங்கள் வீட்டில் உறவினர்களுக்கு இரவு விருந்து அளித்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர், ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை 1:00 மணி முதல் 1:30 மணிக்குள், அந்தக் குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர்.

விவரங்கள்

விருந்தினர்கள் சென்ற பிறகு அவர்கள் தர்பூசணி சாப்பிட்டார்கள்

அதிகாலை நேரத்தில், அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. முதலில் அவர்களுக்கு ஒரு குடும்ப மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆயிஷா காலை 10:15 மணியளவில் இறந்தார், அப்துல்லா அன்றிரவு பின்னர் காலமானார். நஸ்ரின் டோகாடியா மற்றும் ஆயிஷாவும் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். சிக்கன் புலாவை மட்டும் உட்கொண்ட உறவினர்களுக்கு எந்த நோய் அறிகுறிகளும் தென்படவில்லை என்று மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, அந்த இரவு உணவு தான் மரணங்களுக்கு காரணம் என்று கூறமுடியாது.

விசாரணை

மீதமுள்ள உணவு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

ஜே.ஜே. மார்க் காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் ரைஸ் ஷேக் கூறுகையில், அப்துல்லா இறப்பதற்கு முன்பு, உறங்க செல்வதற்கு முன் குடும்பத்தினர் ஒரு தர்பூசணி சாப்பிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். மீதமிருந்த இரவு உணவும், பாதி தர்பூசணியும் நச்சுப் பொருட்கள் உள்ளதா எனச் சோதிப்பதற்காக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜே.ஜே. மார்க் காவல் நிலையத்தில் தற்செயல் மரணம் (AD) என ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement