365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்!
செய்தி முன்னோட்டம்
ஒரு வருடத்தில் 3330 முறை உணவு ஆர்டர் செய்து 'தேசத்தின் மிகபெரும் உணவுப் பிரியர்'(Nation's biggest foodie) என்ற பட்டத்தை டெல்லி இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.
நாம் இருக்கும் இடத்திற்கே வந்து உணவை டெலிவரி செய்வதற்கு தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.
அப்படி ஒரு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான ஆண்டறிக்கையை வெளியிட்டிருந்தது.
அந்த ஆண்டறிக்கையின்படி, டெல்லியை சேர்ந்த அங்கூர் என்ற இளைஞர் ஒரே ஆண்டில் 3,330 உணவு ஆர்டர்களை செய்துள்ளார்.
அவருக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 9 உணவு டெலிவரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து, அந்த இளைஞருக்கு 'தேசத்தின் மிகபெரும் உணவுப் பிரியர்' என்ற பட்டத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.
சொமேட்டோ
இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த சுவாரஸ்யமான தகவல்கள்:
கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் மக்கள் பிரியாணியை தான் அதிகம் ஆர்டர் செய்திருக்கின்றனர்.
2022ஆம் ஆண்டில், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 186 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக, பிட்சா இருக்கிறது. இந்த ஆண்டில், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 139 பிட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன.
மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் உணவு ஆர்டருக்கான தள்ளுபடி கூப்பன்களைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் ரூ.2.43 லட்சம் சேமித்திருக்கிறார்.
மேலும், ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தந்தூரி சிக்கன், பட்டர் நான், வெஜ் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைடு ரைஸ், வெஜ் பிரியாணி ஆகியவை அடங்கும் என்கிறது ஸ்விக்கி நிறுவனம்.