நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது. திங்கட்கிழமை துவங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று(செப்.,20) மக்களவையில் நடைபெற்றது. இதன் முடிவில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 454 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 2 வாக்குகள் அதற்கு எதிராக பதிவாகியுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா மத்திய மற்றும் மாநில சட்ட பேரவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.