NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள் 

    ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2024
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்( CrPC ), சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

    IPCக்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், IPCயில் இருக்கும் 22 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 175 விதிகளில் மாற்றம் செய்யப்ட்டுள்ளன. மேலும், 8 புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    CrPCக்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், CrPCயில் இருக்கும் 7 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 160 விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 9 புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியா

     பிரிட்டிஷ் காலனித்துவ சட்டங்கள் அகற்றம்

    இந்திய சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய சாக்ஷ்யா சட்டத்தில், சாட்சியச் சட்டத்தில் இருக்கும் 5 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 23 விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த மூன்று சட்டங்களும் கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

    IPC, CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் அனைத்தும் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்டதாகும்.

    இந்த பழைய சட்டங்கள் "அடிமைத்தனத்தின் அடையாளங்கள்" என்று வாதிட்ட இந்திய அரசாங்கம், மொத்தம் 475 இடங்களில் இருந்து அந்த அடையாளங்களை அகற்றப்போவதாக தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  ரஷ்யா
    இந்தியாவில் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு
    இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025