
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,19) தலைமை செயலகத்தில் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் ரூ.92.50 கோடி மதிப்பில் தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டடான்-II பகுதியில் 4.16 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 63,100 சதுரடி பரப்பளவில் தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
தஞ்சாவூரில் பிள்ளையார்பட்டியில் 3.40 ஏக்கர் நில பரப்பளவில் ரூ.30 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 55,000 சதுரடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
அடிக்கல் நாட்டப்பட்டது
சமூகப்பொருளாதார வளர்ச்சி அடையக்கூடும்
இதனை தொடர்ந்து, சேலத்தில் ஓமலூர் வட்டம் ஆணைகெளண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பளவில் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பில் 55,000சதுரடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் குறிப்பிட்ட அந்த 3 மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் அதே மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைப்பெற வாய்ப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதன்மூலம் அப்பகுதிகளில் உள்ள சமூகப்பொருளாதார வளர்ச்சியும் அடையக்கூடும் என்று தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த டைடல் பூங்காக்கள் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மேம்பட வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.