தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!
கடந்த 5 வருடங்களில் ஏறத்தாழ 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கை: இந்தியாவில் மொத்தமாக 7.20 லட்சம் அதில் 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் 2.50 லட்சம் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 77,659 பேர் இந்திய விவசாயிகள் மட்டும் 28,572 பேர் தென் இந்தியாவின் மூன்று மாநிலங்கள் அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் வந்திருக்கிறது.
விவசாயிகள் தற்கொலை! இதற்கு என்ன தீர்வு?
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாம். மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைக் குறைந்துவரும் நேரத்தில் இந்த மாநிலங்களில் மட்டும் அதிகரித்து வருகிறதாம். விவசாயிகளின் தற்கொலைக்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட திட்டங்களும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.