25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
செய்தி முன்னோட்டம்
இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
இந்த உயர்வு ரூ.5 முதல், ரூ.65 வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.
அதன்படியே தற்போது கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில், 29 சுங்கச்சாவடிகளில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.5 - 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
card 2
பொதுமக்கள் அதிருப்தி
தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் 29 சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது.
இந்த உத்தரவின்படி, 4-சக்கர வாகனங்களுக்கு ஒருமுறைக்கான கட்டணம் ரூ.85-ல்இருந்து ரூ.90, இருமுறை கட்டணம் ரூ.125-ல்இருந்து ரூ.135 என்றும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.145-லிருந்து ரூ.160, இருமுறை கட்டணம் ரூ.220-லிருந்து ரூ.240 என்றும், கனரக வாகனங்களில் லாரி, பேருந்துக்கு ரூ.290-ல் இருந்து ரூ.320, இருமுறைக்கு ரூ.440-ல்இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
இந்த விலையுயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், ஒரு சில சாலைகளில், சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், வசூலிக்கப்படும் கட்டணங்களுக்குரிய சேவை வழங்கபட வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.