NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு
    ஓசூரில் இருக்கும் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

    ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 14, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வன உயிரின காப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, "ஓசூரில் இருக்கும் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் காவேரி வடக்கு சரணாலயத்தின் பரப்பளவு 504.33 சதுர கிலோ மீட்டர் மற்றும் காவேரி தெற்கு சரணாலயத்தின் பரப்பளவு 686.40 சதுர கிலோ மீட்டர் ஆகும். இந்த சரணாலயங்களில் 36 வகையான பாலூட்டி இனங்களும், 468 வகையான தாவரங்களும், 172 வகையான வண்ணத்து பூச்சி இனங்களும், 272 வகையான பறவைகளும் இருக்கிறது." என்று கூறியுள்ளார்

    தமிழகம்

    218 பறவை இனங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டது

    இது குறித்து மேலும் பேசிய அவர், "இந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வனத்துறையின் மூலம் இரண்டு கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்ட கணக்கெடுப்பு காப்புக் காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலப் பகுதிகளில் எடுக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு காப்புக்காடு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பின் போது, பெரிய பச்சைப் புறா, ஊதா தேன்சிட்டு, நீலத் தொண்டை ஈப்பிடிப்பான், கருந்தலை மாம்பழக் குருவி, செந்தலை பஞ்சுருட்டான், கள்ளிப் புறா, மீன் கொத்தி, கொண்டலாத்தி குருவி, அரசவால் ஈப்பிடிப்பான், காட்டுப் பக்கி குருவி, சிறிய மீன்பிடி கழுகு உள்ளிட்ட 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிக்கப்பட்டது" என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தமிழ்நாடு

    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு உலக செய்திகள்
    "வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்": கவிஞர் வைரமுத்து கோலிவுட்
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025