2027-ல் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை; பட்டியல் வெளியானது; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் பயணங்கள் மற்றும் நிகழ்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வசதியாக, 2027 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் பண்டிகை நாட்கள், முக்கியத் தலைவர்களின் பிறந்தநாட்கள் மற்றும் தேசிய விழாக்கள் உட்பட மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
வார இறுதி நாட்கள்
வார இறுதி நாட்களில் வரும் விடுமுறை நாட்களின் விவரம்
அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 2027-ஆம் ஆண்டில் வரும் 23 பொது விடுமுறை நாட்களில் 6 விடுமுறைகள் சனிக்கிழமைகளிலும், 2 விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகின்றன.
மேலும், 5 விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் அமைவதால், வார இறுதி நாட்களுடன் சேர்த்துத் தொடர் விடுமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைத்துள்ளது.
இது முன்கூட்டியே பயணங்களை திட்டமிடுபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
ஜனவரி - மே
ஜனவரி முதல் மே வரை வரும் விடுமுறை நாட்கள்
ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2027 (வெள்ளிக்கிழமை)
பொங்கல் - 15.01.2027 (வெள்ளிக்கிழமை)
திருவள்ளுவர் நாள் - 16.01.2027 (சனிக்கிழமை)
உழவர் திருநாள் - 17.01.2027 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பூசம் - 22.01.2027 (வெள்ளிக்கிழமை)
குடியரசு நாள் - 26.01.2027 (செவ்வாய்க்கிழமை)
ரம்ஜான் - 10.03.2027 (புதன்கிழமை)
புனித வெள்ளி - 26.03.2027 (வெள்ளிக்கிழமை)
தெலுங்கு வருடப் பிறப்பு - 07.04.2027 (புதன்கிழமை)
தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் - 14.04.2027
(புதன்கிழமை) மகாவீரர் ஜெயந்தி - 19.04.2027 (திங்கட்கிழமை)
மே நாள் - 01.05.2027 (சனிக்கிழமை)
பக்ரீத் - 17.05.2027 (திங்கட்கிழமை)
ஜூன் - டிசம்பர்
ஜூன் முதல் டிசம்பர் வரை வரும் விடுமுறை நாட்கள்
மொகரம் - 15.06.2027 (செவ்வாய்க்கிழமை)
சுதந்திர நாள் / மிலாதுன் நபி - 15.08.2027 (ஞாயிற்றுக்கிழமை)
கிருஷ்ண ஜெயந்தி - 25.08.2027 (புதன்கிழமை)
விநாயகர் சதுர்த்தி - 04.09.2027 (சனிக்கிழமை)
காந்தி ஜெயந்தி - 02.10.2027 (சனிக்கிழமை)
ஆயுத பூஜை - 08.10.2027 (வெள்ளிக்கிழமை)
விஜயதசமி - 09.10.2027 (சனிக்கிழமை)
தீபாவளி - 28.10.2027 (வியாழக்கிழமை)
கிறிஸ்துமஸ் - 25.12.2027 (சனிக்கிழமை)
குறிப்பு: வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவிற்காக ஏப்ரல் 1, 2027 வியாழக்கிழமை வணிக/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது