பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு
மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் பத்ம விருதுகளும் அடங்கும், பொதுநலன், மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், குடிமைப் பணிகள், இலக்கியம், கல்வி, விளையாட்டு என்று பல துறைகளில் சாதனை செய்த கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தன்று, மிக உயர்ந்த பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று விருதுகள் வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 6 பத்ம விபூஷன், 9 பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ சேவை முதல் கல்வி, இலக்கியப் பணி என்று விருதுகள் பெறுவோர் பட்டியல் அறிவிப்பு
மருத்துவ சேவைக்காக தனது வாழ்நாளை அர்பணித்த திலீப் மஹாலனாபிஸ் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறால் ஏற்படக் கூடிய நீரிழிப்புப் பிரச்சனைக்கு இவர் கண்டறிந்த ORS, மருத்துவ உலகில் மிகபெப்ரிய புரட்சியை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாக, 91 சாதனையாளர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் இருவர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மக்களின் நாயகர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று டிவிட்டரில் #peoplespadma என்ற ஹாஷ்டாகில் வைரலாகி வருகின்றது.