சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒவ்வொரு முகாம் அமைக்கப்பட்டது.
அதில் ஒரு மருத்துவர், மருந்தாளுனர், நர்சு, உதவியாளர் ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டு அங்கு வரும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் துவங்கிய இந்த முகாமில் காய்ச்சல், இருமல், சளி, ரத்த சோகை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் சாமியானா, பந்தல் ஆகியன போடப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த முகாம்கள் குறித்த விழிப்புணர்வினை அந்தந்த பகுதி மக்களுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் ஏற்படுத்தினர்.
மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது
தொடர் காய்ச்சல் பாதிப்பு உள்ளோருக்கு ரத்த பரிசோதனை
வைரஸ் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முகாம் நடப்பது குறித்து அறிந்ததும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து சிகிச்சை பெற்றனர்.
இதனால் முகாம்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர் காய்ச்சல் பாதிப்பு உள்ளோருக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிகிச்சை பெற வந்தவர்களிடன் மருந்து மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சுடுநீர் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முகாம்களில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சத்து மாத்திரைகளும், சிரப்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.