Page Loader
98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட  105 வயது அக்காள்! 
98 வயது தங்கையின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய 105 வயது அக்காள்

98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட  105 வயது அக்காள்! 

எழுதியவர் Arul Jothe
Jun 07, 2023
04:56 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில், நான்கு தலைமுறைகளைக் கண்ட 98 வயது பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு வைரலாகி வருகிறது. வேலாயி என்று அழைக்கப்படும் இந்த மூதாட்டிக்கு, 6 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளன. பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயி சமீபத்தில் 98 வயதை அடைந்தார். இந்த பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவெடுத்த பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்கள் என பலரை அழைத்து இருந்தனர். சுவாரசியமான விஷயமாக, வேலாயி அம்மாளின் மூத்த சகோதரியும், விழாவில் கலந்து கொண்டார். அவரின் பெயர் கருப்பாயி அம்மாள். அவருக்கு 105!! மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரும் கலந்துகொண்டு அவர்களது பிறந்தநாளை சிறப்பித்தனர். இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ட்விட்டர் அஞ்சல்

பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய 98 வயது மூதாட்டி