ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டண சேவை முறையான யுபிஐ பிரபலமாகி, இந்திய மக்கள் அனைவரும் அதனை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
மத்திய நிதியமைச்சகம் பகிர்ந்த தகவலில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 95,000 மோசடி சம்பங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான சமயங்களில் பயனர்களை ஏமாற்றி அவர்களையே பணத்தை அனுப்ப வைத்திருக்கின்றனர். அதானது, யுபிஐ பயனர்களின் அலட்சியமும், விழிப்புணர்வின்மையுமே பெரும்பாலான சமயங்களில் யுபிஐ மோசடிகள் அரங்கேறக் காரணமாக இருந்திருக்கிறது.
மக்களுக்கு பல வகைகளில் டிஜிட்டல் நிதி மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும், தொடர்ந்து இது போன்ற மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
யுபிஐ மோசடி
மோசடி வகைகள்:
யுபிஐ பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாத பயனர்களிடம், அவர்கள் பணத்தை பெறுவதற்கு மோசடி நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் எனக் கூறி பின்னப் யுபிஐ பின்னை செலுத்தி பணம் செலுத்த வைக்கின்றனர் மோசடி நபர்கள்.
வங்கியில் இருந்து பேசுவது போல் ஏமாற்றி பயனர்களின் வங்கி அல்லது டெபிட் கார்டு தகவல்களைப் பெற்று, பின்னர் அதனை யுபிஐ சேவைகளில் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர்.
யுபிஐ பின் நம்பரை தெரியாத நபர்களிடம் பகிர்வதன் மூலம் பயனர்கள் பணத்தை இழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
பொது இடங்களில் உள்ள வை-பையை பயன்படுத்தி யுபிஐ கட்டணம் செலுத்துவதன் மூலம் ஹேக்கர்களுக்கு தங்களுடைய தகவல்களை தாங்களே அறியாமல் அளித்து, அதன் மூலமும் மோசடி சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.