LOADING...
பெண்களுக்கு ரூ. 5,000 'மெகா' கிப்ட்! அதிரடியாக ரூ. 2,000-ஆக உயர்கிறது உரிமைத் தொகை
ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

பெண்களுக்கு ரூ. 5,000 'மெகா' கிப்ட்! அதிரடியாக ரூ. 2,000-ஆக உயர்கிறது உரிமைத் தொகை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2026
10:07 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கித் கணக்கில் இன்று காலை தலா ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், உரிமைத் தொகையை முடக்க சூழ்ச்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அதனை முறியடிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இன்று வழங்கப்பட்டுள்ள ரூ. 5,000 தொகையில் பின்வருவன அடங்கும்: பிப்ரவரி மாதத்திற்கான ரூ. 1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக முன்கூட்டியே தலா ரூ. 1,000 வீதம் ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு நிதியாகக் கூடுதலாக ரூ. 2,000.

ட்வீட்

முதல்வரின் உறுதிமொழி

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர், "தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்த்தார்கள், ஆனால் நமது அரசு முந்திக்கொண்டது. யார் தடை ஏற்படுத்தினாலும் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்க மாட்டேன்," என்று கூறியுள்ளார். மேலும், அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், தற்போது வழங்கப்படும் ரூ. 1,000 உரிமைத் தொகையானது ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்ற புதிய வாக்குறுதியையும் அவர் பெண்களுக்கு வழங்கியுள்ளார். தமிழக பெண்களின் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement