'Toxic' டீசரில் மிரட்டும் 'ராயா' - பெயருக்கு பின்னால் ஒளிந்துள்ள ரகசியம் என்ன?
செய்தி முன்னோட்டம்
கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில்,'Fairytale for grownups' என்று வர்ணிக்கப்படும் இப்படத்தில் யாஷ் 'ராயா' என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த டீசரில் யாஷின் கதாபாத்திரம் 'ராயா' என்று அழைக்கப்படுவது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. சமஸ்கிருதத்தில் 'ராயா' என்றால் 'அரசன்' அல்லது 'ஆளுமை மிக்கவர்' என்று பொருள். வரலாற்று ரீதியாகப் பார்த்தால், விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் இது நினைவூட்டுகிறது. அதே வேளையில், சமஸ்கிருதத்தில் இதற்கு 'வேகம்' அல்லது 'பாய்ந்தோடும் நீரோடை' என்றும் அர்த்தம் உண்டு. டீசரில் யாஷின் அதிரடியான நகர்வுகள் இந்த வேகத்தை பிரதிபலிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
RAYA
— Yash (@TheNameIsYash) January 8, 2026
Toxic : A Fairy Tale for Grown-Ups in cinemas worldwide on 19-03-2026#ToxicTheMovie pic.twitter.com/fpSdI8utAv
கதாபாத்திரம்
பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரம்
ஹீப்ரு மொழியில் 'ராயா' என்பதற்கு 'நண்பன்' அல்லது 'அன்பிற்குரியவன்' என்று பொருள். ஒரு பக்கம் வன்முறையும் அதிகாரமும் நிறைந்த அரசனாகத் தெரிந்தாலும், மறுபக்கம் பாசம் மற்றும் தனிமை நிறைந்த ஒரு மனிதனாக யாஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. தூய்மையான ஹீரோவாக மட்டுமில்லாமல், பலவீனங்கள் மற்றும் ஆபத்துகள் நிறைந்த ஒரு நவீன கால மன்னனாக யாஷ் இப்படத்தில் வலம் வருகிறார். ஸ்டைலான தோற்றம், புகைமூட்டத்திற்கு மத்தியில் வெளிப்படும் கம்பீரம் எனத் டீசர் முழுவதும் யாஷின் மேனரிசம் மிரட்டலாக உள்ளது. கே.ஜி.எஃப் 'ராக்கி பாய்' கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, கதையின் நாயகனாக யாஷ் திரும்புவது அவரது ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.